அந்தியூர் அருகே மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் மூதாட்டி ஒருவர் தூக்கிட்டி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம் பழனியப்பா வீதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 72). மூதாட்டியான சாந்தி அதே பகுதியை சேர்ந்த பாப்பாத்தி என்பவர் வீட்டில் கடந்த 6 மாதமாக தனியாக குடியிருந்து வந்தார். இவருக்கு சர்க்கரை நோய் இருந்ததால் இடது கால் பாதத்தில் காயம்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலை அவர் குடியிருந்த வீட்டில் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அந்தியூர் காவல் உதவி ஆய்வாளர் வெங்கடாசலம் பிரேதத்தை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த அந்தியூர் போலீசார் மூதாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்