ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே முதியவர் விஷம் சாப்பிட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விஷம் சாப்பிட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த சின்னபருவாச்சி கொத்துக்காரர் தோட்டத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 60). இவரது மனைவி சண்முகம்மாள், கடந்த 6 மாதங்களுக்கு முன்பும், இவரது மகன் தனபால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பும் இறந்தனர்.தனியாக வசித்து வந்த சொக்கலிங்கம் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் குருணை மருந்து சாப்பிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் சொக்கலிங்கம், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்