ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்றால் இன்று (30ம் தேதி) பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-09-30 12:15 GMT

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி மீது தண்ணீர் ஊற்றிய போலீசார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்றால் இன்று (30ம் தேதி) பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குறிச்சி பிரிவு கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி செல்லம்மாள். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் மூதாட்டி தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், திருப்பூரில் வசித்து வரும் இவரது 3வது மகன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மூதாட்டி செல்லம்மாளை ஏமாற்றி கையெழுத்தை பெற்று கொண்டு, சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 செண்ட் நிலத்தை அபகரித்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மூதாட்டி செல்லம்மாள், இப்பிரச்சனை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நிலத்தை மீட்டுத் தரக்கோரி ஏற்கனவே, ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்ததாகவும், இதுகுறித்து இதுவரை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி இன்று (30ம் தேதி) காலை மூதாட்டி செல்லம்மாள் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது மூதாட்டி திடீரென மண்ணெண்ணெய்யை தனக்குத்தானே உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உடனடியாக அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்ததோடு, அவர் மீது தண்ணீரை ஊற்றி மூதாட்டி செல்லம்மாளை பத்திரமாக மீட்டனர்.

பின்னர், அவரை சூரம்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News