அந்தியூரில் நெடுஞ்சாலைத்துறை பணி குறித்து உள்தணிக்கை குழுவினர் ஆய்வு!

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகளின் தரம் குறித்து, உள் தணிக்கை குழுவினர் ஆய்வு நடத்தினர்.;

Update: 2025/05/06 13:40 GMT

அந்தியூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகளின் தரம் குறித்து, உள் தணிக்கை குழுவினர் ஆய்வு நடத்தினர். 

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆண்டு தோறும் மே மாதத்தில் பணிகளின் தரம் குறித்து உள்தணிக்கை குழுவினர் ஆய்வு மேற்கொள்ளுவார்கள். அதன்படி, ஈரோடு நெடுஞ்சாலை கட்டுமான மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் கீழ் உள்ள அந்தியூர் மற்றும் பெருந்துறை பிரிவுகளில் உள்ள சாலைகளில் பல்வேறு இடங்களில் இன்று (மே.6) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோவை திட்ட கண்காணிப்பு பொறியாளர் ஜெயலட்சுமி தலைமையில், கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா, உதவி கோட்ட பொறியாளர் அருட்செல்வன், தரக்கட்டுப்பாட்டு பொறியாளர்கள் அடங்கிய கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, அந்தியூர் பிரிவு உதவி பொறியாளர் பாபு சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News