சித்தோட்டில் டி.என்.கே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி!
ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் டி.என்.கே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
சித்தோட்டில் டி.என்.கே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி சலங்கபாளையத்தில் உள்ள டி.என்.கே மெட்ரிக் மேல்நிலைப் சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி சித்தோட்டில் இன்று (ஏப்ரல் 12ம் தேதி) நடைபெற்றது.
இந்த பேரணிக்கு, டி.என்.கே பள்ளி தாளாளர் ஜி.ஏ.பழனிச்சாமி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் எஸ்.செங்கோட்டையன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, மாவட்ட சமூக நல அமைப்பாளர் கீதா ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர்.
அப்போது, மாணவ, மாணவிகள் பாலியல் குற்றங்களுக்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்தியும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில், சித்தோடு போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.