அந்தியூரில் வன பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வன பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2025-03-22 00:20 GMT

அந்தியூரில் வன பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில் உலக வன நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வனத்துறை அதிகாரி முருகேசன் தலைமை தாங்கி, வனங்களை பாதுகாப்பது, விரிவுப்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, வனத்துறை அலுவலகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில், ஜேகேகே முனி ராஜா வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள், அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உள்பட வன ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News