ஈரோட்டில் வரும் மே.4ம் தேதி அங்கக விளை பொருட்களுக்கான வேளாண் சந்தை!
ஈரோட்டில் முதல் முறையாக வரும் மே 4ம் தேதி அங்கக விளை பொருட்களுக்கான வேளாண் சந்தை நடக்கிறது.;
ஈரோட்டில் முதல் முறையாக வரும் மே 4ம் தேதி அங்கக விளை பொருட்களுக்கான வேளாண் சந்தை நடக்கிறது.
தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஈரோடு மாநகராட்சி வ.உ.சி பூங்கா மைதானத்தில் உள்ள வாக்கர்ஸ் கிளப்பில் அங்கக வேளாண் சந்தை வரும் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறவுள்ளது.
அங்கக முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் விளை பொருட்கள், மஞ்சள் தூள், எண்ணெய் வகைகள், போன்றவை விவசாயிகளால் விற்பனை செய்யப்பட உள்ளது.
எனவே, அங்கக சான்று பெற்று விளைவித்த வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகளும், நஞ்சு இல்லா காய்கறிகள், பழங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளை பொருட்களை வாங்கிட விரும்பும் நுகர்வோர்கள் அங்கக வேளாண் சந்தையில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இந்த அங்கக வேளாண் சந்தையில் பங்கு பெற்று விளைபொருட்களை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.