பவானி காவல் உட்கோட்ட புதிய டி.எஸ்.பி.யாக அமிர்தவர்ஷினி பொறுப்பேற்பு
DSP Officer- ஈரோடு மாவட்டம் பவானி காவல் உட்கோட்ட புதிய டி.எஸ்.பி.யாக அமிர்தவர்ஷினி பொறுப்பேற்றுக் கொண்டார்.;
பவானி உட்கோட்ட போலீஸ் டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி.
DSP Officer- ஈரோடு மாவட்டம் பவானி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக அமிர்தவர்ஷினி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டாா். பவானி டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த தீபக்சிவாச் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிற்சி டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த அமிர்தவர்ஷினி பவானி டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றாா். இதனைத் தொடர்ந்து அவருக்கு காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2