அந்தியூரில் 34 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 34 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1988-89, 1989-90 ஆகிய கல்வி ஆண்டில் படித்த அறிவியல் பிரிவு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அந்தியூர்-பவானி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களுக்கு சால்வை அணி–வித்து அவர்களுக்கு நினைவுப்பரிசினை வழங்கி வாழ்த்து பெற்றனர். இதில் அந்தியூர், நாகலூர், செம்புளிச்சாபாளையம், பச்சாம்பாளையம், அண்ணா மடுவு, கந்தம்பாளையம், தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பி பாளையம், சங்கராபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து படித்த மாணவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் இருந்து வருகின்றார்கள். அந்த மாணவர்கள் தங்களுடைய ஆசிரியருக்கு நினைவு பரிசினை வழங்கியதை பெற்று கொண்ட ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.