திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

கவுந்தப்பாடி தொட்டிபாளையம் ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Update: 2022-01-22 04:45 GMT

திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்.

ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி வடக்கு ஒன்றியம் தொட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட, மாற்று கட்சியை சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள் கார்த்திகா, மேகலா, ரத்தினம்மாள் ஆகியோர், பவானி வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் மகேந்திரன்,  தொட்டிபாளையம் ஊராட்சி துணை தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் நல்லசிவம் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த வார்டு கவுன்சிலர்கள் மாவட்ட கழக செயலாளர் நல்லசிவத்திடம் சால்வை வழங்கினார். இந்த நிகழ்வின் போது,  தொட்டிபாளையம் வார்டு கவுன்சிலர்கள் சுரேஷ், மாரசாமி, அந்தோனிசாமி, தேவராஜன், தங்கவேல் மற்றும் கிளை செயலாளர்கள் பூபதி, சிவகுமார், குணசேகரன், முனியப்பன், மகளிர் அணி கல்பனா, பவானி வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் இளையராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News