பவானியில் அதிமுக கட்சி அலுவலகம் திறப்பு

பவானியில் புதிதாக அமைக்கப்பட்ட அதிமுக கட்சி அலுவலகத்தை, முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.;

Update: 2022-05-25 13:45 GMT

பவானி அதிமுக கட்சி அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் கே.சி‌கருப்பண்ணன் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட பவானியில் புதிய நகர செயலாளராக சீனிவாசன் மாரிமுத்து என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்தனர். இதையடுத்து பவானியில் புதிய அதிமுக அலுவலகம் தேர் வீதியில் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று அதிமுக நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுகவின் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே சி கருப்பண்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி உள்ளிட்டோருடன் மாவட்ட செயலாளர் கே.சி.கருப்பண்ணன் ஆலோசனை நடத்தினார். மேலும் பவானி நகராட்சிக்குட்பட்ட மக்கள் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் பவானி நகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News