அந்தியூர் பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகையை வழங்கிய அதிமுக உறுப்பினர்

டெபாசிட் தொகையை வழங்கிய அதிமுக உறுப்பினரை, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் மனதார பாராட்டினார்.;

Update: 2022-02-02 17:15 GMT

டெபாசிட் தொகையினை வழங்கிய போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் கட்சி அலுவலகத்தில், இன்று மதியம், ஆலோசனை மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டு, வேட்பாளர்களை சந்தித்து, பிரச்சார வியூகங்கள் பற்றி ஆலோசனை நடத்தினார். அப்போது, அந்தியூர் ராஜ வீதியில் நகைக்கடை நடத்தி வரும், அதிமுக கட்சி உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், அந்தியூர் பேரூராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் டெபாசிட் தொகையை, முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையனிடம் வழங்கினார்.

டெபாசிட் தொகை வழங்கிய கிருஷ்ணமூர்த்தியை, முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் மனதார பாராட்டி வாழ்த்தினார். இதை சற்றும் எதிர்பாராத தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். அப்போது நகரச் செயலாளர் டிஎஸ் மீனாட்சி சுந்தரம், மாவட்ட கவுன்சிலர் சண்முகவேல், அதிமுக நிர்வாகிகள் சண்முகானந்த குருராஜ் பாலுச்சாமி ஹோட்டல் கிருஷ்ணன் பார் மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News