அந்தியூர்: அதிமுக அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான கழக அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.;
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அந்தியூர் ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், மற்றும் பகுதி நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டமானது, அந்தியூர்-அத்தாணி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கழக அமைப்புத் தேர்தல் குறித்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கே.செங்கோட்டையன் மற்றும் கடலூர் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தலுக்கான விண்ணப்பத்தினை, கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைப்பு தேர்தலில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றியும், தொண்டர்கள் அமைப்பு தேர்தலுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் முன்னாள் எம்பி சத்தியபாமா, முன்னாள் எம்எல்ஏ ரமணீதரன், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட , நகர, ஒன்றிய , பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.