நகர்புற உள்ளாட்சி தேர்தல்: அந்தியூரில் நாளை அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்.

அந்தியூரில் நாளை நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக சார்பில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.;

Update: 2022-02-01 17:00 GMT

பைல் படம்.

அந்தியூர் தவிட்டுப்பாளையம் அஇஅதிமுக கட்சி அலுவலகத்தில் நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்கிறார். நகர்ப்புற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவினர், ஆளும் திமுகவை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்நிலையில் தவிட்டுப்பாளையம் அதிமுக கட்சி அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ள முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் கோபி சட்டசபை உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசுகிறார்.

Tags:    

Similar News