கோபிசெட்டிபாளையம் நகராட்சி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த மொடச்சூரில் தனியார் மண்டபத்தில் கோபி நகர அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. நேற்று அதிமுக தலைமை கழகம் கோபி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்திருந்தது. இதனையடுத்து, கோபி நகராட்சியில் 30 வார்டுகளிலும் உள்ள வேட்பாளர்களை முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து, பேசிய எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கோபி நகராட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தியதாகவும், மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்களை எடுத்து கூறி பணியாற்றினால் வெற்றி பெற முடியும் என கூறினார். இந்த கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரமணீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.