ஈரோட்டில் நாளை (26ம் தேதி) வேளாண் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில், நாளை (26ம் தேதி) வெள்ளிக்கிழமை வேளாண் குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் நவம்பர் மாதத்துக்கான வேளாண் குறைதீர் கூட்டம், ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில். நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம். 12:30 முதல் 1.30 மணி வரை அலுவலர்கள் விளக்கம் அளிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.