அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையை ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.;
அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையை ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, இட பற்றாக்குறை உள்ளதால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.5 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
இதனைத் தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக பகுதியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் புதிய கட்டட பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ தலைமை வகித்து புதிய அலுவலகம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமுதா, சக்திவேல், அந்தியூர் பேரூர் திமுக செயலாளர் எஸ்.கே.காளிதாஸ், திமுக பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய செயற்பொறியாளர்கள் அருண் கார்த்திக், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.