கோபிக்கு வருகை தந்த அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு
ஈரோடு மாவட்டம் கோபிக்கு வருகை தந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.;
கவுந்தப்பாடி நால்ரோடு சந்திப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்த முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளார்.இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கோபிக்கு வருகை தந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு கவுந்தப்பாடி நால்ரோடு சந்திப்பில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ, பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கோபி வேலவா திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக கோபி நகர எல்லையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பான வரவேற்பு அளித்தார். இதில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபி ரமணிதரன், முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.டி.சரஸ்வதி, பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் வைகை தம்பி (எ) ரஞ்சித் ராஜ், அருள் ஜோதி செல்வராஜ், விஜயன் (எ) ராமசாமி, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அருணாச்சலம், மாவட்ட பொருளாளர் கே.பி.எஸ். மணி, கோபி தொகுதி ஒன்றிய செயலாளர்கள் சென்னை மணி (எ) ஈஸ்வரமூர்த்தி, தம்பி (எ) சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன், வக்கீல் வேலுமணி மற்றும் அனைத்து சார்பணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.