அத்தாணி பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம்

அத்தாணி பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் அடிப்படைத் தேவைகளை செய்து கொடுக்காததை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

Update: 2022-08-12 09:15 GMT

அத்தாணி பேரூராட்சி அலுவலகத்தில் அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் 11 வார்டுகளில் திமுகவும் ஒரு வார்டில் சுயேட்சியும் மூன்று வார்டுகளில் அதிமுகவும் வெற்றி பெற்றது. இதில் பத்தாவது வார்டு தேன்மொழி 14 ஆவது வார்டில் அறிவழகன் 15 வது வார்டில் மருதமுத்து ஆகிய மூன்று பேரும் அதிமுக கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த மூன்று வார்டுகளிலும் அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் மறுப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று காலை பேரூராட்சி அலுவலகத்தில் அதிமுக கவுன்சிலர்களான மூன்று பேரில் பெண் கவுன்சிலருக்கு உடல்நலன் சரியில்லாதால் வரவில்லை. இதனால், மற்ற இரண்டு பேரும் பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றார்கள்.

Tags:    

Similar News