ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021-22 ம் ஆண்டிற்கான சேர்க்கை துவக்கம்
ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021-2022 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள கோபி (D.G.புதூர்) மற்றும் ஈரோடு (காசியாளையம்) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பதாரர்கள் நேரடி சேர்க்கைக்காக வரவேற்கப்படுகிறார்கள். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் டெக்ஸ்டைல், வெட் ப்ராசசிங், டெக்னீசியன் மற்றும் மெஸினிஸ்ட் தொழிற்பிரிவிலும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வெல்டர் தொழிற்பிரிவிலும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை மூலம் சேர்ந்து பயில வரவேற்கப்படுகிறார்கள்.
மாணவர்களுக்கு 14 வயது முதல் ௪௦ வயது வரையும், மாணவிகளுக்கு வயது வரம்பு கிடையாது. பயிற்சியில் சேரும் மாணவ மாணவியருக்கு சிறந்த கட்டணமில்லா பயிற்சியுடன் தமிழக அரசால் மாதம் ரூ.750 உதவித் தொகை, விலையில்லா பாடபுத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, வரைபடக் கருவிகள், தையற்கூலியுடன் இரண்டு செட் சீருடை, காலணி மற்றும் கட்டணமில்லா பேருந்து பாஸ் ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், D.G.புதூர், கோபிசெட்டிபாளையம் 04285-233234, 94990 55705, மற்றும் முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஈரோடு 0424-2275244, 9443257677, ஆகிய தொலைப்பேசி எண்களிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.