ஈரோடு அருகே கணக்கம்பாளையத்தில் கோவில் விளை நில குத்தகை ஏலம் ஒத்திவைப்பு

கோபி அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான விளை நிலம் குத்தகை ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

Update: 2022-07-01 03:30 GMT

கணக்கம்பாளையம் கிராமத்தில் கோவில் நிலம் குத்தகை ஏலம் தொடர்பான கூட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக அதே பகுதியில் 158 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது.இந்த விளை நிலங்கள் ஆண்டுதோறும் குத்தகை அடிப்படையில் பொது ஏலத்தில் விடப்படும், அதன் ஒரு பகுதியாக நேற்று இக்கோயில் வளாகத்தில் பொது ஏலம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பரம்பரை அறங்காவலர் நரசிம்மர், கோபி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஹரி, சத்தியமங்கலம் செயல் அலுவலர் கலைவாணி மற்றும் கிளார்க் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலையில் 54 குத்தகைதாரர்களும், மற்ற விவசாயிகளும் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ஏலம் தொடங்கிய போது தொடர்ந்து விளை நிலங்களை குத்தகை எடுத்து பயன்படுத்தி வரும் குத்தகைதாரர்கள், ஏலம் விடும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.அதே நேரத்தில் ஏலத்தில் கலந்து கொள்ள வந்த மற்ற விவசாயிகள் ஏல முறையை அமல்படுத்த அதிகாரிகளை வலியுறுத்தினர்.


தனால் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு கூட்டத்திற்கு வந்திருந்த அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி மீண்டும் மறு உத்தரவு பெற்று ஏலம் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறும்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முறையாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தால் ஏராளமான விவசாயிகள் முன் வைப்புத்தொகையை செலுத்தி ஏலத்தில் கலந்து இருப்பார்கள்.தற்போது ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மறு ஏலம் விடுவதற்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முறையாக விளம்பர அறிவிப்பு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News