கொடுமுடியில் நடிகர் சத்யராஜின் சகோதரி நீத்தார் கடன் கரைப்பு
கொடுமுடி காவிரி ஆற்றில் நடந்த நீத்தார் கடன் நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்;
நடிகர் சத்யராஜின் சகோதரி கல்பனா மன்றாடியார் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். அவரது அஸ்தியை, கொடுமுடி காவிரி ஆற்றில், சத்யராஜ் குடும்பத்தினர் நேற்று முன்தினம் கரைத்தனர். முன்னதாக பிண்டம் வைத்து, திதி கொடுத்து, அஸ்தி விசர்ஜனம் செய்து, காவிரியில் மோட்ச தீபம் விட்டனர். இதில் சத்யராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.