பவானியில் அதிக சத்தம் எழுப்பிய 15 இருசக்கர வாகனங்களுக்கு அபராதம்!

ஈரோடு மாவட்டம் பவானியில் அதிக சத்தம் எழுப்பிய 15 இருசக்கர வாகனங்களுக்கு தலா ரூ.2,500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.;

Update: 2025-04-13 01:00 GMT

பவானியில் அதிக சத்தம் எழுப்பிய 15 இருசக்கர வாகனங்களுக்கு தலா ரூ.2,500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமிநகர் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணகுமார், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிக சத்தம் எழுப்பக்கூடிய புகைபோக்கிகளுடன் (சைலன்சர்) ஓடிய 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அந்த இருசக்கர வாகனங்களில் இருந்த புகைபோக்கிகளை மெக்கானிக் மூலம் அகற்றினர்.

பின்னர், ஒவ்வொரு வாகன ஓட்டிகளுக்கும் தலா ரூ.2 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Similar News