அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால் நடவடிக்கை
அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் கேரளாவில் நாளை 26ம் தேதியும், ஆந்திராவில் மே.13 அன்றும், கர்நாடகாவில் முதற்கட்டமாக நாளை மற்றும் இரண்டாம் கட்டமாக மே.7ம் தேதியும் நடைபெற உள்ளது.
எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடங்கள். அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும், தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.
தேர்தல் நாளில் அவர்கள் வாக்கு செலுத்த ஏதுவாக, ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகாரை, வினோத்குமார் இணை இயக்குநர், தொழிலக மற்றும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், ஈரோடு என்ற முகவரியிலும், 99943 80605, 0424 2219521 ஆகிய எண்களிலும், கார்த்திகேயன் இணை இயக்குநர், போன் 98650 72749, 0424 2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.