ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் சாதனையாளர்கள் தின விழா

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் சாதனையாளர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2025-03-12 12:20 GMT

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் சாதனையாளர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு, பெருந்துறை கொங்கு வேளாளர் தொழில் நுட்பக் கல்லூரி அறக்கட்டளையின் பாரம்பரியப் பாதுகாவலர் பி.சச்சிதாநந்தன் தலைமை தாங்கினார்.

கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் ஹெச்.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக பெங்களூர் வெல்ஸ் பார்கோ நிறுவனத்தின் பிஸினஸ் இண்டலிஜெண்ட் துணைத்தலைவர் கௌரிசங்கர் குணசேகரன் மற்றும் தனியார் தொலைக்காட்சியின் அரசியல் நிபுணர் மற்றும் பத்திரிக்கையாளர் எஸ் தமிழ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.


அப்போது, வாழ்க்கையில் சாதனை படைக்க பல்வேறு தடைகளைப் படிக்கல்லாக நினைத்து முன்னேற வேண்டும் என்றும், ஒவ்வொரு முயற்சியும் சாதனைக்கான பயிற்சியென்றும் எடுத்துக்கூறி பல்வேறு அறிஞர்கள் பற்றியும், தன் வாழ்வின் வெற்றிப்பயண அனுபவம் குறித்தும் எடுத்துக்கூறி அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில் பேசினர்.

தொடர்ந்து, நடப்பாண்டில் சாதனை படைத்த கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்குப் பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன. விழாவில், கல்லூரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் வரவேற்புரை வழங்கினார். விழா நிறைவாக நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் நன்றியுரை வழங்கினார்.

Similar News