ஈரோடு: 24.54 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி -சுகாதாரத்துறையினர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 24.54 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல்.;

Update: 2021-12-13 12:00 GMT

ஈரோடு மாவட்டத்தில் 14 கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர்.

மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி மொத்தம் 24 லட்சத்து 54 ஆயிரத்து 232 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News