அந்தியூர்: தனியார் பேருந்து மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலி

அந்தியூர் அருகே தனியார் பேருந்து மோதியதில், கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.;

Update: 2022-03-29 05:00 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பருவாச்சி அருகே உள்ள பிச்சனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (58).கூலி தொழிலாளி. நேற்று இரவு பருவாச்சி அருகே உள்ள பெட்ரோல் பங்கில், தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது, பருவாச்சி புன்னம் பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்தியூரில் இருந்து ஈரோடு செல்லும் எஸ்பிஎம் என்ற தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக பழனிச்சாமி மீது மோதியது.

இதில்,  தலை கால் பகுதிகளில் பலத்த காயமடைந்த பழனிச்சாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், பழனிச்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரது மனைவி சரசால் (50) கொடுத்த புகாரின் பேரில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News