அந்தியூர் அருகே மினி வேன் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

அந்தியூர் அடுத்த ஒலகடம் அருகே மினி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ஒருவர் உயிரிழந்தார்.;

Update: 2022-02-16 10:45 GMT
விபத்தினை ஏற்படுத்திய மினி வேன்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52). இவர் இன்று மதியம் 2 மணியளவில் தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, தளபாளையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒலகடம் செல்லும் சாலையின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மினி வேன் முருகேசன் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த முருகேசன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் உதவி ஆய்வாளர் வேலுமுத்து,  விபத்தினை ஏற்படுத்திய ஒலகடத்தை சேர்ந்த மினி வேன் டிரைவர் மன்சூர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News