பெருந்துறை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
பெருந்துறை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெருந்துறை அடுத்துள்ள சீனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். தறி குடோன் தொழிலாளி. சம்பவத்தன்று, வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக தனது பைக்கில், ஆயிகவுண்டன்பாளையம் குட்டைரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக் நிலை தடுமாறியதில், பைக்கில் இருந்து பிரபாகரன் கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த, பிரபாகரன் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம், பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.