பவானி அருகே தேசியநெடுஞ்சாலையில் ஆறு வாகனங்கள் மோதி விபத்து

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமி நகர் பகுதியில் மினி லோடு வேன் சாலையில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பின்னால் வந்த ஆறு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

Update: 2022-10-10 12:00 GMT

பவானி அருகே தேசியநெடுஞ்சாலையில் ஆறு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து.

ஈரோடு மாவட்டம் பவானி பைபாஸ் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமி நகர் பகுதியில் அத்திக்கடவு அவிநாசி திட்ட பணிகளுக்காக சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த மினி லோடு வேன் சாலையில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனாால் ,பின்னால் வந்த ஆறு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமி நகர் சமத்துவபுரம்மேடு பகுதியில் அத்திக்கடவு அவிநாசி திட்ட பணிகளுக்கு இராட்சத குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சித்தோடு பகுதியில் இருந்து இருந்து சிமெண்ட் மூட்டை பாரம் ஏற்றிக் கொண்டு  மினி லோடு வேன் ஒன்று வந்தது. மினி லோடு வேனை பவானி காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் பெருமாள் என்பவர் வாகனத்தை ஓட்டி வந்தார். அப்போது, வந்து கொண்டிருந்தத மினி லோடு வேன் கட்டுப்பாட்டை இழந்து தேசியநெடுச்சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து லோடு வேனுக்கு பின்னால் சேலம் நோக்கி வந்த 3 கார்கள் மற்றும் இரண்டு தனியார் நிறுவன பேருந்து உள்ளிட்டவை அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த தனியார் நிறுவன பணியாளர்கள் மற்றும் காரில் பயணம் செய்தவர்கள் என பத்துக்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்..தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிமெண்ட் லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.‌  இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மினி லோடு வேன் கவிழ்ந்து பின்னால் வந்த ஆறு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளான வாகன விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சித்தோடு பகுதியில் சுமார் ஒரு நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது‌ .

Tags:    

Similar News