பவானி ஆப்பக்கூடல் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம்பெண் திடீர் மாயம்

பவானி அடுத்த ஆப்பக்கூடல் அருகே இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-05-15 14:00 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ள புன்னம் செல்லிங்கம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்.இவருக்கும் வேம்பத்தி முனியப்பம்பாளையத்தை சேர்ந்த ராதாமணி மகள் ரோஜா(21) என்பவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.இந்தநிலையில்,நேற்று அதிகாலை 4 மணியளவில் ரோஜா படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

பின்னர், காலை 6 மணியளவில் பார்த்தபோது ரோஜாவை காணவில்லை.இதையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இதுகுறித்து ரோஜாவின் தாயார் ராதாமணி ஆப்பக்கூடல் போலீசில் கொடுத்தார்.இதனையடுத்து, புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News