கவுந்தப்பாடி சலங்கபாளையத்தில் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழப்பு

கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையத்தில் விஷம் குடித்து இளம்பெண் உயிரிழந்தது பற்றி கோபி ஆர்.டி.ஓ விசாரணை நடத்துகிறார்-;

Update: 2022-08-12 10:30 GMT
பைல் படம்

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி சலங்கபாளையம் மகாலட்சுமிநகரை சேர்ந்தவர் கலையரசன். இவரது மனைவி பவித்ரா (22).இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு சாதனாஸ்ரீ என்ற 2 வயது குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக பவித்ராவுக்கு வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் கணவர் கலையரசன் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த பவித்ரா விஷம் குடித்து மயங்கி விழுந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். நேற்று அதிகாலை மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பவித்ரா பரிதாபமாக இறந்தார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கோபி கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News