அந்தியூர் அருகே சாலையில் உலா வந்த காட்டு யானை: மரக்கிளையை முறித்து தின்றது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சாலையில் உலா வந்த காட்டு யானை, மரக்கிளையை முறித்து தின்றது. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2025-03-03 00:40 GMT

சாலையில் உலா வந்த காட்டு யானை மரக்கிளையை முறித்து தின்று கொண்டிருந்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் அருகே உள்ள மலைக்கிராமம் துருசனாம்பாளையம். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த கிராமத்தின் வழியாக மைசூர் சாலை செல்கிறது.

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை நேற்று மைசூர் ரோட்டுக்கு வந்தது. பின்னர் சாலையோரம் இருந்த மரத்தின் கிளையை முறித்து காட்டு யானை தின்றது.

இதை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களு டைய வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி கொண்டனர். மேலும் சிலர் தங்களுடைய செல்போனில் காட்டு யானையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

சிறிது நேரம் வரை மரக்கிளையை தின்று கொண்டிருந்த யானை பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News