ஈரோடு 46புதூர் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம்
ஈரோடு அருகே உள்ள 46புதூர் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நேற்று (டிச.18) நடைபெற்றது.
ஈரோடு அருகே உள்ள 46புதூர் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நேற்று (டிச.18) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டாரம் அவல்பூந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட 46புதூர் ஊராட்சி நொச்சிக்காட்டுவலசு பகுதியில் ஈரோடு மனவளக்கலை மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடத்தப்பட்டது.
ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், 100 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் காசநோய் இல்லா ஈரோடு இயக்கத்தின் நோக்கம் மற்றும் பயன்கள், தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள் அதன் அங்கஹீன பாதிப்புகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, தொழு நோய்க்கான சிகிச்சை முறை மற்றும் இலவசமாக கிடைக்கும் இடங்கள், மழைக்கால நோய்கள் அதன் தடுப்பு வழிமுறைகள், சுற்றுப்புற சுகாதார பராமரிப்பு வழிமுறைகள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம், பாதுகாப்பற்ற குடிநீரால் பரவும் நோய்கள், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட நோக்கம் மற்றும் பயன்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்ய வேண்டியதின் அவசியம் குறித்து சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
முன்னதாக இந்த முகாமை ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் மருத்துவப் பணிகள் மரு.ராமச்சந்திரன் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு.அருள்மொழி, வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சுரேஷ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சிவகுமார், சுகாதார ஆய்வாளர்கள் ஜீவானந்தம், தியானேஸ்வரன், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், நடமாடும் மருத்துவக் குழுவினர், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள், ஈரோடு மனவளக்கலை மன்றத்தினர்கள் மற்றும் பொதுமக்கள் 150 பேர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மார்பக ஊடுகதிர் பட பரிசோதனை, சளி பரிசோதனை, உயர் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய்க்கான இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.