அந்தியூர்: வெள்ளித்திருப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு, உலக மலேரியா தின விழிப்புணர்வு முகாம்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு, உலக மலேரியா தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;

Update: 2025-04-27 11:30 GMT

அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு, உலக மலேரியா தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் வட்டாரம் வெள்ளித்திருப்பூர்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் உலக மலேரியா தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன்பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், காசநோய் பாதித்தவருடன் வசிப்போர் சிஓய்டிபி பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியதின் அவசியம்,நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்பாடுகள், காசநோய்க்கான சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்வதின் அவசியம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, காசநோய் ஒழிப்பில் பொதுமக்களின் பங்கு, மலேரியா காய்ச்சல் பரவும் விதம், மலேரியா காய்ச்சலின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், மலேரியா காய்ச்சலுக்கான இரத்த தடவல் பரிசோதனையின் அவசியம், மலேரியா எதிர்ப்பு தினத்தின் நோக்கம்,கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு சுய மருத்துவம் தவிர்த்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் , மருத்துவ அலுவலர் மரு. சித்தேஸ்வரன், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜயசேகர், சுகாதார ஆய்வாளர் சீனிவாசரகுபதி, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர்,செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் 90 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் மலேரியா, டெங்கு எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், முடிவில், உலக மலேரியா தின உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு காசநோய்க்கான நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Similar News