ஈரோட்டில் அகில இந்திய ரயில் ஓட்டுநர் சங்கம் சார்பில் கருத்தரங்கம்
ஈரோட்டில் அகில இந்திய ரயில் ஓட்டுநர் சங்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.;
ஈரோட்டில் அகில இந்திய ரயில் ஓட்டுநர் சங்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில்" ரயில்வே பாதுகாப்பு அதன் தீர்வுகளும் "என்ற தலைப்பில், ஈரோட்டில் இரண்டு நாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. சேலம் கோட்டைச் செயலாளர் எஸ்.அருண்குமார் வரவேற்றார். தென் மண்டல தலைவர் ஆர்.குமரேசன் தலைமை உரை வாசித்தார். மத்திய பொதுச் செயலாளர் கே.சி.ஜேம்ஸ் தொடக்க உரை வாசித்தார். தென் மண்டல செயலாளர் பா.பாபு ராஜன் செயலாளர் அறிக்கை வாசித்தார்.
தொடர்ந்து, தென்மண்டல பொருளாளர் பி.ஜெகதீசன் வரவு செலவு கணக்கு அறிக்கை வாசித்தார். இதில், அனைத்து இந்திய இன்சுரன்ஸ் தொழிலாளர் சங்க துணை செயலாளர் எஸ்.ரமேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் எச்.ஸ்ரீராம், பி.கே.ஜெகதீசன், டி.சுனில் குமார், எஸ்.நரசிம்மன், கே.வி.ரமேஷ், சி.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தின் முடிவில் சேலம் கூட்டத் தலைவர் சீனிவாச பட் நன்றி கூறினார்.