ஈரோட்டில் ஓய்வூதியர் தின சிறப்புக் கருத்தரங்கு

ஈரோட்டில் ஓய்வூதியர் தின சிறப்புக் கருத்தரங்கம் நேற்று (டிச.17) நடைபெற்றது.

Update: 2024-12-18 00:30 GMT

ஈரோடு பெரியார் மன்றத்தில் நடந்த ஓய்வூதியர் தின சிறப்புக் கருத்தரங்கு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோட்டில் ஓய்வூதியர் தின சிறப்புக் கருத்தரங்கம் நேற்று (டிச.17) நடைபெற்றது.

தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஈரோடு பிரிவு சார்பில் ஓய்வூதியர் தின சிறப்புக் கருத்தரங்கம் ஈரோடு பெரியார் மன்றத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் வ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் சங்கரன். நா.மணிபாரதி, பாலசுப்பிரமணியன், கதிர்வேல், துரைசாமி, ஹாரிதாஸ் ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன முன்னாள் பொருளாளர் கே.ராஜ்குமார் கலந்து கொண்டு மூத்த உறுப்பினர்களை கவுரவித்து பேசினார். பி.செல்வராசன், எஸ்.ஜெய்சங்கர், பி.கிருஷ்ணமூர்த்தி. ஜி.ஹரிதாஸ், துரைசாமி, கதிர்வேல், பரமசிவம், ராஜகோபால், பிரபாகரன், கண்ணாயம்மாள் ஆகியோர் பேசினர்.

குப்புசாமி, குழந்தைசாமி, சண்முகம், மூர்த்தி, பழனிச்சாமி, ஜெகநாதன், நல்லசாமி, ஜெயபால் உள்பட தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம், ஓய்வு பெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியர் நல சங்கம், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். எம்.துரை பாண்டியன் நிறைவுரை ஆற்றினார்.


முன்னதாக ஆர்.நாச்சிமுத்து வரவேற்றார். முடிவில் எம்.ஆர்.பெரியசாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News