ஈரோடு ஆட்சியர் தலைமையில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர் நாள் கூட்டம்!
ஈரோட்டில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நேற்று (ஏப்.29) நடைபெற்றது.;
ஈரோட்டில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நேற்று (ஏப்.29) நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட முன்னாள் படைவீரர்கள், அவர்தம் சார்ந்தோர்கள் மற்றும் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர்கள், அவர்தம் சார்ந்தோர்கள் மற்றும் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மேலும், நிலுவையிலுள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, முன்னாள் படைவீரர் நலன் கண்காணிப்பாளர் மற்றும் உதவி இயக்குநர் (முகூபொ) மு.புஷ்பலதா, லெப் கர்னல்.நாகராஜன் (ஓய்வு) (முன்னாள் படைவீரர் மாவட்ட முப்படை வீரர் வாரியம்), லெப் கர்னல்.கிரீஷ் (ஓய்வு), நல அமைப்பாளர் சீ.சாமுவேல் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.