ஈரோடு ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம்

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (மார்ச் 28) நடைபெற்றது.;

Update: 2025-03-28 12:40 GMT

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (மார்ச் 28) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வீட்டுமனைப்பட்டா, அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டிற்கு கடனுதவி, பணிநியமனம், உயர் ஆதரவு தொகை, வருவாய் துறை மூலம் பெறப்படும் உதவித்தொகை, தொகுப்பு வீடுகள், கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் தொடர்பான 62 மனுக்களை மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் பெற்று, சம்பந்த அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, தென் இந்திய தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் ஈரோடு மாவட்டத்தைத் சேர்ந்த 8 மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றதையடுத்து, மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் கோப்பையினை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து, வாழ்த்து பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து, காசிபாளையம் பகுதியைச் சேர்ந்த நிர்மலா தேவி என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.13 ஆயிரத்து 730 மதிப்பீட்டில் கைபேசியினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொ) ரோஸ்பாத்திமாமேரி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News