ஈரோட்டில் வரும் 28ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஈரோட்டில் வரும் மார்ச் 28ம் தேதி நடக்கிறது.;
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஈரோட்டில் வரும் மார்ச் 28ம் தேதி நடக்கிறது.
ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் வருகிற மார்ச் 28ம் தேதி மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் இணைய வழி மூலம் விண்ணப்பிக்க வேண்டிய இனங்களை கண்டிப்பாக இணையவழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும். இதர கோரிக்கைகளை மட்டுமே எழுத்துப்பூர்வமான மனுக்களாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
எனவே, ஈரோடு மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய குறைகளை சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாமில் கலந்து கொண்டு மனுக்களாக வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.