சத்தியமங்கலம் அருகே தார் சாலையை சீரமைக்கக் கோரி கையெழுத்து இயக்கம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள செண்பகப்புதூரில் தார் சாலையை சீரமைக்கக் கோரி இளைஞர் மன்றம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
சத்தியமங்கலம் அருகேயுள்ள செண்பகப்புதூரில் தார் சாலையை சீரமைக்கக் கோரி இளைஞர் மன்றம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகப்புதூர் ஊராட்சியில், மாரனூர் மேட்டுக்கடை முதல் நடுப்பாளையம் தம்மக்காவூர், சின்னவாய் வழியாக வேடசின்னானூர் வாய்க்கால் பாலம் வரை செல்லும், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான தார் மிக மோசமான நிலையில் சிதிலமடைந்துள்ளது.
இதனால் அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடிவதில்லை. ஆகவே இந்த தார் சாலையை செப்பனிடக்கோரி கையெழுத்து இயக்கத்தை அனைத்திந்திய இளைஞர் மன்றத்தினர் நடத்தினர்.
இந்த கையெழுத்து இயக்கத்தை தொழிற்சங்க தலைவர் இரா.ஸ்டாலின் சிவக்குமார், மாரனூர் மேட்டுக்கடையில் தொடக்கி வைத்தார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் சதீஷ் தலைமையில் இளைஞர்கள் ஒன்று திரண்டு, நடுப்பாளையம், சின்னவாய், தம்மக்காவூர், சின்னகுட்டை புதூர் ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் கையொப்பங்களை பெற்றனர்.
இந்த கையொப்பங்கள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கவும் முடிவு செய்தனர். இந்த கையெழுத்து இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சி.நடராஜ், சிவராஜ், சத்யராஜ், பிரதீப் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர்.