அந்தியூர் அருகே பர்கூரில் குப்பையில் கிடந்த பாட்டில் வெடித்து பள்ளி மாணவன் படுகாயம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூரில் குப்பையில் கிடந்த பாட்டில் வெடித்ததில் பள்ளி மாணவன் படுகாயமடைந்தான்.;
அந்தியூர் அருகே பர்கூரில் குப்பையில் கிடந்த பாட்டில் வெடித்ததில் பள்ளி மாணவன் படுகாயமடைந்தான்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மேற்கு மலை ஆலசொப்பனட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் இந்திரன் (வயது 14). ஓசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மாலை 4 மணி அளவில் பள்ளிக்கூடம் முடிந்ததும் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது ரோட்டோரம் இருந்து குப்பையில் தீ எரிந்து கொண்டு இருந்தது.
இந்திரன் இந்த குப்பை கிடந்த பகுதியை கடந்து சென்றபோது குப்பையில் இருந்து பாட்டில் திடீ ரென வெடித்து சிதறி இந்திரன் மேல் பட்டது. இதில் வயிறு, கையில் படுகாயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடித்தது பாட்டில் தானா? அல்லது வேறு ஏதாவது மர்ம பொருளா? என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.