பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம்: விரைவில் அமலுக்கு வருகிறது!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது.;
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய கைக்குழந்தைகளுடன் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் பெண் பக்தர்களின் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இதற்கான அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். முதல்கட்டமாக, நாள்தோறும் காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்பட 10 கோவில்களில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பண்ணாரி மாரியம்மன் கோவிலில் தினந்தோறும் பக்தர்களின் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், நாள்தோறும் காய்ச்சிய பால் வழங்கும் இந்த திட்டத்தை விரைவில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டமானது, அடுத்த மாதம் (ஜூன்) 3ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளில் தொடங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.