ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணிக்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் பணிக்காக அவுட்சோர்சிங் மூலம் வந்திருந்த ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை அலுவலக உதவியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.;

Update: 2025-01-10 07:30 GMT

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தேர்தல் பணிக்காக வந்த சந்திரமோகன் மயங்கிய நிலையில், போலீசார் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த போது எடுத்த படம்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் பணிக்காக அவுட்சோர்சிங் மூலம் வந்திருந்த ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை அலுவலக உதவியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்.5ம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு மாநகராட்சி அலுவலக கட்டடத்தில் இன்று (ஜன.10) காலை 11 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை அலுவலக உதவியாளராக இருந்து ஓய்வு பெற்ற சந்திரமோகன் என்பவர் அவுட்சோர்சிங் முறையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக மாநகராட்சி அலுவலகம் வந்துள்ளார்.

அப்போது, மாநகராட்சி அலுவலகத்திற்குள் செல்ல முயன்றபோது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர், அவரை அரசு வாகனத்தில் ஏற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் பணிக்காக வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News