ஈரோடு மாவட்டத்தில் வரும் 12ம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் முகாம்!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் வரும் 12ம் தேதி (சனிக்கிழமை) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் வரும் 12ம் தேதி (சனிக்கிழமை) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் ஏப்ரல் மாதம் 12ம் தேதி அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசிஎண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.
அதன்படி, ஈரோடு வட்டத்தில் கங்காபுரம் ரேஷன் கடையிலும், பெருந்துறை வட்டத்தில் கே.ஜி.வலசு முருங்கத்தொழுவு ரேஷன் கடையிலும், மொடக்குறிச்சி வட்டத்தில் கோவிந்தநாயக்கன்பாளையம் ரேஷன் கடையிலும் நடக்க உள்ளது.
அதேபோல், கொடுமுடி வட்டத்தில் நஞ்சைக்கொளாநல்லி ரேஷன் கடையிலும், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் கொண்டையம்பாளையம் - 2 ரேஷன் கடையிலும், நம்பியூர் வட்டத்தில் கோசணம் -1 ரேஷன் கடையிலும் நடைபெற உள்ளது.
மேலும், பவானி வட்டத்தில் தொட்டிபாளையம் ரேஷன் கடையிலும், அந்தியூர் வட்டத்தில் அத்தாணி -1 ரேஷன் கடையிலும், சத்தியமங்கலம் வட்டத்தில் குன்றி ரேஷன் கடையிலும், தாளவாடி வட்டத்தில் முதியனூர் ரேஷன் கடையிலும் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.