ஈரோட்டில் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம்!
வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.;
வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை திரும்பபெற கோரி பல்வேறு அரசியல் கட்சி யினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சேவாதளம் சார்பில் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது.
இதற்காக மாவட்ட தலைவர் முகமது யூசப் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஈரோடு தலைமை தபால் நிலையத்துக்கு வந்தனர். பின்னர், அங்கு காங்கிரஸ் கட்சியினர் பலர் வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு தபால்களை அனுப்பினர்.