முதிய தம்பதி படுகொலையை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் முதிய தம்பதி படுகொலையை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
சிவகிரியில் முதிய தம்பதி படுகொலையை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளாங்காட்டுவலசு பகுதியில் முதிய விவசாய தம்பதி ராமசாமி, பாக்கியம் ஆகியோர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான திமுக அரசை கண்டித்தும், விளக்கேத்தி நான்கு சாலை சந்திப்பில் இன்று (மே.5) ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கே.எஸ்.தென்னரசு, பாலகிருஷ்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் வீரக்குமார் ஒன்றிய செயலாளர்கள் மயில் சுப்பிரமணி, செல்வராஜ், கதிர்வேல், கலைமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கொலையாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வலியுறுத்தியும், தி.மு.க அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.