ஈரோட்டில் நாளை (டிச.11) வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

வாடகை கட்டிடங்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நாளை (டிச.11) கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது

Update: 2024-12-10 11:15 GMT

வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்.

வாடகை கட்டிடங்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நாளை (டிச.11) கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

வாடகை கட்டிடங்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில், நாளை (டிச.11) புதன்கிழமை மாலை 3 மணிக்கு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்ட போராட்டம் நடக்கிறது.

இதில் ஜிஎஸ்டியை எளிமையாக பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் மட்டுமே வசூலிக்கும் நடைமுறையைக் கொண்டு வர வேண்டும். ஜியோ, டி-மார்ட் போன்ற கார்பரேட் நிறுவனங்கள் உணவு பொருட்கள் விற்பனையில் இறங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆன்லைன் வணிகத்தில் உணவு பொருள்களையும், மருந்து பொருள்களையும் விற்பனை செய்வதைத் தடை செய்ய இந்திய அரசை வலியுத்திவும், சொத்துக்கள் மீதான வரி ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்வு என்பதைத் திரும்ப பெற வேண்டும்.

வணிக உரிமக்கட்டணம் மற்றும் தொழில்வரி போன்றவற்றின் உயர்வை திரும்ப பெற வேண்டியும், மாதம்தோறும் மின் கட்டணம் வசூலிப்பதை உடனடியான நடைமுறைபடுத்து வேண்டி தமிழக அரசை வலியுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

Tags:    

Similar News