பெருந்துறை அருகே போக்சோவில் பாலிடெக்னிக் ஆசிரியர் கைது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பாலிடெக்னிக் ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.;
பெருந்துறை அருகே பாலிடெக்னிக் ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 17 வயது மாணவி படித்து வந்தார். கடந்த 6ம் தேதி அந்த மாணவியிடம் கல்லூரியின் ஆசிரியர் செல்வராஜ் (வயது 36) என்பவர் பாலியல் ரீதியாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பெருந்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஆசிரியர் செல்வராஜ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே செல்வராஜ் தலைமறைவானார். இதனால் அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த செல்வராஜை, பெருந்துறை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து கல்லூரியில் இருந்து செல்வராஜ் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.