ஆப்பக்கூடல் அருகே ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
ஆப்பக்கூடல் அருகே ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஆப்பக்கூடல் அருகே அருகே உள்ள கூத்தம்பூண்டி அம்மன்கோவில்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (36). இவர், நேற்று இரவு 7.30 மணியளவில் ஈரோடு - சத்தியமங்கலம் செல்லும் தனியார் பேருந்தில் ஆப்பக்கூடல் பேருந்து நிறுத்தத்தில் ஏறி பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். அப்போது, ஆப்பக்கூடல் ஏரி வளைவில் பேருந்து திரும்பிய போது நிலைதடுமாறி பேருந்தின் பின்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து அங்குள்ளவர்கள் விபத்தில் சிக்கிய சுரேஷை மீட்டு ஆப்பக்கூடல் விஎம்கே மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் பலனின்றி சுரேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து, சுரேஷின் மனைவி இருசாயி அளித்த புகாரில் பேரில் ஆப்பக்கூடல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.